வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahalakshmi
Last Updated : சனி, 15 நவம்பர் 2014 (13:01 IST)

வருகிறது நோலனின் இன்டர்ஸ்டெல்லர்... புது அனுபவத்துக்கு தயாராகுங்கள்

கிறிஸ்டோபர் நோலன் என்ற பெயர் ஹாலிவுட்டைத் தாண்டி உலகம் முழுவதும் பிரசித்தம். இவரது ஆரம்பகால படங்களில் ஒன்றாக மெமண்டோவைதான் காப்பி திலகம் கஜினி படமாக எடுத்தார். 
 
குறுகிய வட்டத்தில் அறியப்பட்ட நோலனை பிரபலமாக்கியது பேட்மேன் பிகின்ஸ் திரைப்படம். அதையடுத்து வந்த த டார்க் நைட், உலகம் முழுவதும் வசூலை அள்ளியது. இன்செப்ஷன் நோலனை இன்னும் ஒருபடி உயர்த்தியது.
 
நோலனின் புதிய படம் இன்டர்ஸ்டெல்லர். மேத்யூ மெக்கன்னகி நடித்துள்ள இப்படத்தை ப்ரீமியர் ஷேnவில் பார்த்தவர்கள் கொண்டாடுகிறார்கள். விண்வெளி குறித்து எடுக்கப்பட்ட படங்களில் இதுதான் பெஸ்ட் என்கிறார்கள். 
 
நாளை இப்படம் யுஎஸ்ஸில் வெளியாகிறது. வெள்ளிக்கிழமை முதல் இந்தியாவில்.
 
ஒரு புது அனுபவத்துக்குத் தயாராகுங்கள்.