1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (10:57 IST)

வெளியானது ஹவுஸ் ஆப் தி ட்ராகன் அப்டேட்! – கேம் ஆப் த்ரோன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி!

பிரபல வெப் சிரீஸான கேம் ஆப் த்ரோன்ஸின் முன்கதையான ஹவுஸ் ஆப் தி ட்ராகன் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹாலிவுட்டில் 2011ம் ஆண்டில் வெளியான வெப் சிரிஸ் கேம் ஆஃப் த்ரோன்ஸ். சாங் ஆப் ஐஸ் அண்ட் ஃபயர் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த வெப் சிரிஸ் பரவலான வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்குள் 8 சீசன்கள் வெளியாகியுள்ளது. இதன் கடைசி சீசன் கடந்த ஆண்டு வெளியானது. இந்த தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடரின் ஸ்பின் ஆஃபாக ஹவுஸ் ஆஃப் ட்ராகன் என்ற புதிய தொடர் தயாரிக்கப்பட்டு வந்தது. முன்னதாக இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஜனவரியில் இந்த தொடர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொடர் இந்த ஆண்டில் ஹெச்பிஓ மேக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹவுஸ் ஆப் தி ட்ராகனின் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.