வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Siva
Last Modified: புதன், 3 மே 2023 (13:54 IST)

AI தொழில்நுட்பத்துக்கு எதிர்ப்பு: ஹாலிவுட் சினிமா எழுத்தாளர்கள் போராட்டம்..!

AI தொழில் நுட்பத்திற்குAI தொழில்நுட்பத்துக்கு எதிர்ப்பு: ஹாலிவுட் சினிமா எழுத்தாளர்கள் போராட்டம்..!
 
எதிர்ப்பு தெரிவித்து ஹாலிவுட் எழுத்தாளர்கள் போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த சில வருடங்களாகவே உலகம் முழுவதும் AI தொழில்நுட்பம் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் இந்த தொழில்நுட்பம் நுழைந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஹாலிவுட் படங்களுக்கு கதைகளை எழுதி வந்த எழுத்தாளர்கள் தற்போது AI தொழில்நுட்பம் காரணமாக தங்களது வேலை பறிபோகிவிடும் வாய்ப்பு இருப்பதாக குற்றம் காட்டியுள்ளனர் 
 
திரைப்படம், தொலைக்காட்சி தொடர்களுக்கு AI தொழில்நுட்பம் மூலம் இயக்குனர்கள் கதை எழுதுவதாகவும் இதை தடுக்க வேண்டும் என்றும் அமெரிக்க எழுத்தாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை எடுத்துள்ளது. 
 
கடந்த 15 ஆண்டுகளில் ஹாலிவுட் எழுத்தாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இடுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva