ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (08:54 IST)

படம் நடிச்சது போதும்.. இனி நீங்க படைத்தளபதி! – ஜேம்ஸ் பாண்ட் நடிகருக்கு இங்கிலாந்து வழங்கிய மரியாதை!

ஹாலிவுட் நடிகர் டேனியல் க்ரெய்க் ஜேம்ஸ் பாண்டாக நடிப்பதை நிறுத்திக் கொள்ள உள்ள நிலையில் இங்கிலாந்து கப்பற்படை அவருக்கு தளபதி பதவி அளித்துள்ளது.

ஹாலிவிட்டில் பிரபலமான ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் டேனிடல் க்ரெய்க். கடந்த 2006 முதலாக ஜேம்ஸ் பாண்டாக நடித்து வரும் டேனியல் க்ரெய்க் இதுவரை கெசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்துள்ள கடைசி ஜேம்ஸ் பாண்ட் படமான “நோ டைம் டூ டை” செப்டம்பர் இறுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதுவே தனது கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் என க்ரெய்க் அறிவித்துள்ள நிலையில் அவரை கௌரவிக்கும் விதமாக இங்கிலாந்து கப்பற்படையில் அவருக்கு படைத்தளபதி பதவி வழங்கப்பட்டது. இங்கிலாந்து கப்பற்படை உடையில் டேனியல் க்ரெய்க் உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.