1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 2 டிசம்பர் 2020 (13:29 IST)

திருநம்பியாக மாறிய பிரபல ஹாலிவுட் நடிகை! – ரசிகர்கள் அதிர்ச்சி; சக நடிகர்கள் வாழ்த்து!

ஹாலிவுட்டில் நோலன் படங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகை எலன் பேஜ் தன்னை ஒரு திருநம்பியாக மாற்றிக் கொண்டுள்ள சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட்டில் பிரபலமான இன்செப்ஷன், எக்ஸ்மேன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் எலன் பேஜ். ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமல்லாது இணைய தொடர்களிலும் நடித்து வரும் இவர் “அம்பர்லா அகாடமி” இணைய தொடர் மூலமாக உலகம் முழுவதும் பல ரசிகர்களை கொண்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக LGBTQ சமூகத்துடனும், அதன் செயல்பாடுகளோடும் இயங்கி வந்த எலன் தான் ஒரு திருநம்பியாக மாறியிருப்பதாகவும், அதனால் தன் பெயரில் முதலில் உள்ள எலன் என்ற பெண் பெயரை நீக்கி, எலியட் என்ற ஆண் பெயரை சேர்த்துக் கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களில் சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அவரது தைரியாமான இந்த முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பிரபல ஹாலிவுட் நடிகர்களான மார்க் ரூபல்லோ, இயக்குனர் ஜேம்ஸ் கன், ஹூஜ் ஜாக்மென் மற்றும் பலரும் அவரது இந்த வெளிப்படையான முடிவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.