1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Sinoj
Last Modified: புதன், 4 நவம்பர் 2020 (17:07 IST)

கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு தயாரான CommonDp...இணையதளத்தில் வைரல்

இந்திய சினிமாவின் அடையாளமாகவும் தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னராகவும் கோலோட்சி வருபவர் கமல்ஹாசன்.

இவரது பிறந்த நாள் வரும் நவம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது ரசிகர்கள் பிரமாண்டமான போஸ்டரை உருவாக்கி அதை அவரது பிறந்தநாளுக்கான CommonDp ஆக சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர்.

அரசனைப் போல் கெட்டப்பில் உள்ள கமல்ஹசனின் கம்பீரம் பார்ப்போரைக் கவர்ந்துள்ளது. மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் அவர் மைலாப்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியானது. அதேசமயம்  வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் ஜெயிக்கவும் அவர் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.