1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahalakshmi
Last Updated : செவ்வாய், 28 அக்டோபர் 2014 (18:15 IST)

ஆஸ்கரை வெல்லப் போகும் படம் - இப்போதே ஆரூடம் சொல்லும் மீடியா

அடுத்த வருடம் ஆஸ்கர் விருதுப் போட்டியில் எந்தப் படம் ஆளுமை செலுத்தப் போகிறது என்று விமர்சகர்களும், மீடியாக்களும் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டன. அவர்களின் ஒட்டு மொத்த சாய்ஸ், அலெஜான்ட்ரோ கொன்சலஸ் இனாரித்துவின் பேர்ட் மேன் திரைப்படம். 
மைக்கேல் கீடன், எம்மா ஸ்டோன் நடித்துள்ள இப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா உள்பட ஒரு டஜன் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறது. யுகே யில் அடுத்த வருடம் ஜனவரி 2 படம் திரைக்கு வருகிறது. இந்தியாவில் ஜனவரி 30.
 
விருதும், பாராட்டும் அலெஜான்ட்ரோவுக்கு புதிது அல்ல. அவரது அமரோஸ் பெரோஸ் திரைக்கதையை தழுவி எடுக்கப்பட்டதுதான் ஆய்தஎழுத்து. அவரது 21 கிராம்ஸ் படத்தின் மோசமான தழுவல்தான் சர்வம். அவரது பேபல் படத்தின் பாதிப்பில் எழுதியதுதான் சரோஜா படத்தின் திரைக்கதை என வெங்கட்பிரபு குறிப்பிட்டுள்ளார்.
 
இப்படி உலகமெங்கும் பாதிப்புகளை உருவாக்கிய அலெஜான்ட்ரோவின் புதிய படம்தான் பேர்ட் மேன். படம் பார்த்தவர்கள் சொல்லும் ஒருவரி பாராட்டு, மாஸ்டர் பீஸ்.
 
இந்தப் படம் ஆஸ்கரில் சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்பட விருதுக்கான பத்து பரிந்துரைகளை பெறும் என்று விமர்சகர்கள் தீர்ப்பிட்டிருக்கிறார்கள். எப்படியும் ஒன்றிரண்டு ஆஸ்கரையாவது படம் வெல்லும்.