வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 6 ஜூலை 2015 (10:31 IST)

ஆறு மாதத்தில் 3 பில்லியன்களை கடந்து டிஸ்னி சாதனை

படங்களின் வசூலை மட்டும் ஹாலிவுட்டில் பார்ப்பதில்லை. டிஸ்னி, பாராமவுண்ட், யூனிவர்சல், வார்னர் பிரதர்ஸ், டுவென்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ், சோனி போன்ற படநிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் எவ்வளவு வசூலிக்கின்றன என்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
கடந்த ஆறு வருடங்களாக டிஸ்னி நிறுவனம் 3 பில்லியன் டாலர்களை கடந்துள்ளன. இந்த வருடம் இன்னும் சீக்கிரம். அதாவது சென்ற வருடத்தைவிட ஐந்து வாரங்களுக்கு முன்பே 3 மில்லியன் டாலர்களை வசூலித்து இந்நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
 
இந்நிறுவனம் இந்த வருடம் வெளியிட்ட சின்ட்ரெல்லா யுஎஸ்ஸில் 200.3 மில்லியன் டாலர்களும் யுஎஸ்ஸுக்கு வெளியே 338.7 மில்லியன் டாலர்களும் வசூலித்தது. அவெஞ்சர்ஸ் - ஏஜ; ஆஃப் அல்ட்ரான் படம் யுஎஸ்ஸில் 454.2 மில்லியன் டாலர்களும், வெளிநாடுகளில் 929.3 மில்லியன் டாலர்களும் வசூலித்துள்ளது. 
 
இரண்டு வாரங்கள் முன்பு வெளியான இன்சைட் அவுட் யுஎஸ்ஸில் நேற்றுவரை 246.2 மில்லியன் டாலர்களும் வெளிநாடுகளில் 117.3 மில்லியன் டாலர்களும் வசூலித்துள்ளது.
 
இந்த மூன்று படங்களின் பிரமாண்ட வசூல் காரணமாக ஜுன் 30 -ஆம் தேதியே டிஸ்னி நிறுவனம் 3 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது. டிஸ்னி நிறுவனத்தைப் பொறுத்தவரை இதுவொரு சாதனை.