வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 6 மே 2015 (15:14 IST)

இதுதாண்டா வசூல் - 3 நாளில் ஆயிரம் கோடிகள்

ப்யூரியஸ் 7 முதல் மூன்று தினங்களில் அறுநூறு கோடிகள் யுஎஸ்ஸில் வசூலித்த போது ஆச்சரியத்தில் பலகோடி வாய்கள் திறந்தன. அவற்றை மேலும் திறக்க வைத்துள்ளது, சென்ற வாரம் வெளியான அவெஞ்சர்ஸ் - ஏஜ் ஆஃப் அல்ட்ரான்.
 
கேப்டன் அமெரிக்கா, ஹல்க், அயன்மேன், தோர் என்று இருக்கிற சூப்பர் ஹீரோக்கள் எல்லாம் இணைந்து நடித்தப் படம் அவெஞ்சர்ஸ். இதன் இரண்டாம் பாகம்தான் ஏஜ் ஆஃப் அல்ட்ரான்.
 
முதல் பாகத்தைவிட பல மடங்கு பெட்டராக இருக்கிறது என்று ப்ரிவியூவில் படம் பார்த்தவர்கள் எழுத, படத்துக்கு எதிர்பார்ப்பு கண்டபடி எகிறியது. முதல் மூன்று தினங்களில் யுஎஸ்ஸில் மட்டும் கிட்டத்தட்ட 1100 கோடிகளை இப்படம் வசூலித்துள்ளது.
 
இந்த வருடம் இதுவரை வெளியான படங்களில் இதுதான் அதிகபட்ச ஓபனிங்.