Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அவதார் படத்தின் அடுத்த பாகங்கள் தண்ணீருக்கு அடியில் ; சுவாரஸ்ய தகவல்


Murugan| Last Modified செவ்வாய், 9 மே 2017 (15:40 IST)
அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களில், பெரும்பாலான காட்சிகள் தண்ணீரில் எடுக்கப்படவுள்ளதாக அப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
 
>  
கடந்த 2009ம் ஆண்டு வெளியான இப்படம் உலகம் முழுவதும் 2.8 பில்லியன் வசூலை வாரிக்குவித்தது. இப்படத்தின் வசூலை இதுவரை எந்த  படமும் முறியடிக்கவில்லை. >  
இந்நிலையில் இப்படத்தின் தொடர்ச்சியாக இன்னும் 4 பாகங்கள் வெளிவர இருக்கிறது.  அவதார் 2 - டிசம்பர் 18, 2020ம் ஆண்டும், அவதார் 3 - டிசம்பர் 17, 2021ம் ஆண்டும், அவர்தார் 4 - டிசம்பர் 20, 2024ம் ஆண்டும், அவதார் 5 - டிசம்பர் 19, 2025ம் ஆண்டும் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 

 
இந்நிலையில், இந்த பாகங்கள் தண்ணீருக்கு அடியில் இருப்பதுபோல் படமாக்கப்பட இருப்பதாக, சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :