டிரைலரே இப்படினா; அப்போ படம் - அன்னபெல்லே வைரல் டிரைலர்
தி கான்ஜூரிங் படத்தின் வரிசையில் வெளியான அன்னபெல்லே படத்தின் இரண்டாம் பாகம் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
ஹாலிவுட் சினிமாவில் பேய் படம் அதிக அளவில் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதில் சில படங்கள் மட்டுமே பார்ப்பவர்களை மிரட்டிவிடும். அந்த வகையில் தி கான்ஜூரிங் படம்தான் இதுவரை வந்த ஹாலிவுட் பேய் படங்களிலே மிரட்டலான படம். அந்த படத்தில் உள்ள கதையில் வரும் ஒரு காட்சியை மையமாக எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான் அன்னபெல்லே. இது அதை விட மிரட்டலானது.
தற்போது இந்த அன்னபெல்லே படத்தின் இரண்டாம் பாகம் டிரைலர் வெளியாகியது. படத்தில் டிரைலரே அச்சத்தில் உறைய வைக்கிறது. அப்போ படம் இன்னும் மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.