வியாழன், 21 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (17:32 IST)

எல்லா சுபகாரியங்களிலும் மாவிலை தோரணம் கட்டப்படுவது ஏன்...?

Mavilai thoranam
எல்லா சுபகாரியங்களிலும் மாவிலைகள் தவறாமல் இடம் பெற்றிருப்பதை நாம் பார்த்திருப்போம். சுப காரியம் நடக்கும் போது மட்டுமல்ல பொதுவாக எல்லா நாட்களிலும் மாவிலை தோரணம் கட்டலாம்.


மாவிலை தோரணம் தினமும் கட்டி தொங்க விடுவதால் ஏராளமான நன்மைகள் உள்ளன. மாவிலை கிடைப்பது ஒன்றும் அரிதான காரியம் அல்ல. நிறைய பேர் அவர்களுடைய வீட்டிலேயே வைத்திருக்கலாம். அல்லது அக்கம் பக்கத்தினரரிடம் கேட்டு வாங்கி வைத்து அழகாக கட்டி தொங்க விடலாம்.

வீட்டில் மாவிலைத் தோரணம் கட்டுவதால் கிருமி நாசினியாகவும் செயல்படும். கண்ணுக்கு தெரியாத நுண்கிருமிகள் உள்ளே நுழையாது. அது போல் பிரபஞ்சத்தில் இருக்கும் பிராண வாயுவை அதிகரிக்கும் ஆற்றல் மாவிலைக்கு உண்டு.

மாவிலை பாசிடிவ் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிற ஆற்றல் கொண்டதால் தீமை விளைவிளைவிக்கும் பாக்டீரியாக்களில் இருந்து நம் வீட்டை பாதுகாக்கிற ஆண்டி பாக்டீரியலாகப் பயன்படுகிறது.

மாவிலையில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அது கெட்ட சக்திகளை வீட்டுக்குள் விடாமல் விரட்டி நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.