ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 4 அக்டோபர் 2022 (09:34 IST)

நவராத்திரி ஒன்பதாம் நாள் சொல்ல வேண்டிய மந்திரம் என்ன...?

saraswati puja
சரஸ்வதி பூஜையன்று செய்ய வேண்டிய பூஜைகளை வழக்கம் போல் செய்து, புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூ சார்த்த வேண்டும். நடுவில் நான்கு இதழ்களும் சுற்றிலும் எட்டு இதழ்களும் கூடிய தாமரைக் கோலமிட்டு அலங்கரிக்கவும். மையத்தில், ஓம்... என்றும் எல்லா இதழ்களிலும், ஐம் என்றும் எழுதவும். மையத்தில் திருவிளக்கும் நான்கு மற்றும் எட்டு இதழ்களில் தீபங்கள் ஏற்றி வைக்கவும்.


மந்திரம்:

ஓம் ஸ்ரீமஹாசரஸ்வத்யை நமஹ|
ஓம் ஐம் வாக்தேவ்யை நமஹ|
ஓம் ஞான தாயின்யை நமஹ|
என்றும் அர்ச்சனை செய்யவும்.
மேதே சரஸ்வதிவரே பூதி பாப்ரவிதாமஸி|
நியதே த்வம் ப்ரசீதேசி நாராயணி நமோஸ்துதே||
என்ற மந்திரம் சொல்லி புஷ்பம் சார்த்தவும்.

நிவேதனம்: பால் கற்கண்டு சாதம் மற்றும் இனிப்புப் பண்டங்களுடன், கடலை சுண்டலும் நிவேதனம் செய்து, சூடம் ஏற்றிக் காண்பிக்கவும். சுமங்கலிகளுக்கு சந்தனக்கலர் ரவிக்கைத் துண்டுடன், மங்களப் பொருட்களும் வழங்கி, நிறைவில் ஆரத்தி எடுத்து தீபத்தை பூஜையறையில் சேர்த்து நிறைவு செய்யவும்.

சுலோகம்:

யாகுந்தேந்து துஷாரஹார தவளா
யாஸுப்ர வஸ்த்ராவ்ருதா|
யவீணா வரதண்ட மண்டிதகரா
யாஸ்வேத பத்மாஸனா||
யா ப்ரம்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபி:
தேவைஸ்ஸதா பூஜிதா|
ஸா மாம் பாது ஸரஸ்வதி பகவதீ
நிஶ்ஶேஷஜாட்யாபஹா||

- ஸ்ரீ சரஸ்வதி ஸ்தோத்ரம்.

பொருள்: ஸ்ரீ சரஸ்வதி, நிலவின் குளிர்ச்சியான வெண்ணிறம் உடையவள். வெண்பட்டாடை அணிபவள். வெண்தாமரையில் அமர்ந்து வீணை இசைப்பவள். பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் முதலிய தேவர்களும் ஞானம் பெற வேண்டி வழிபடப் படுபவள். உலக உயிர்களின் அறியாமை இருளைப் போக்கும் அந்த சரஸ்வதி தேவி, எனக்கும் நல்லறிவு அருளி காப்பாற்ற வேண்டும்.