1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: சனி, 2 ஜூலை 2022 (14:00 IST)

சனி பகவான் குறித்த அரிய தகவல்கள் என்ன...?

Sani Bhagavan
சனிபகவான் ஒரு மனிதனுக்கு ஆயுள் ஆதிக்கம் செய்யக்கூடியவர். அதனால் தான் இவரை ஆயுள் காரகன் என போற்றப்படுகிறார். ஒருவருக்கு நீண்ட ஆயுள் கிடைப்பதற்கும், அகால மரணம் உண்டாக காரகன் சனீஸ்வரன் தான்.


அதுமட்டுமல்லாமல் ஒருவரின் தர்மம், அர்த்தம், காமம், மோக்‌ஷம் ஆகிய நான்குக்கும் காரகன் இவரே. யார் ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால், அவரின் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெற்று, வாழ்க்கையில் உயர்வடைவான்.

யார் ஒருவரின் ஜாதகத்தில் சனி நீசமாகவோ, பகையாகவோ இருந்தால், அவரின் வாழ்க்கையில் பல்வேறு தோல்விகளைச் சந்திக்க வேண்டியது இருக்கும். பல முறை முயற்சி செய்தே வெற்றி பெற வேண்டியதாக இருக்கும். துன்பங்களை அனுபவிக்க நேரிடும். மற்ற கிரகங்கள் வலிமையாக இருந்தால் மட்டுமே, அவருக்கு சாதகமான பலன்கள் எளிதாக கிடைக்கும்.

சனி பெயர்ச்சி : இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி செய்வார். ஜன்ம ராசிக்கு முன் மற்றும் பின் உள்ள ராசிகளுக்கு ஏழரை சனி நாக்கும். ஏழரை வருடத்தை இரண்டரை, இரண்டரை ஆண்டுகளாக பிரிக்கப்படுகிறது. இதனை மங்கு சனி, தங்கு சனி, பொங்குசனி என்று பிரித்துப் பலன் சொல்வார்கள். ஜாதகத்தில் சனி அமர்ந்துள்ள நிலைப்படி அவரது ஆட்சி, உச்ச, நீசத் தன்மையை வைத்து ஏழரைச் சனி பலன்கள் ஏற்படும்.

ஏழரை சனி தரும் பலன்:
யார் ஒருவர் தர்ம விதிகளை தவறாமல், நேர்மையுடன் உழைக்கின்றாரோ, ஒழுக்கத்துடன் நியாயமாக வாழ்பவருக்கு சனி பகவானின் அனுக்கிரகம் எப்போதும் இருக்கும். அவருக்கு ஏழரை சனி நடந்தாலும் அதனால் எந்த ஒரு பெரிய பாதிப்பும் ஏற்படாது. தர்மமும், நேர்மை, ஒழுக்கம் தவறியவர்களைச் சனி பகவான் தண்டிக்காமல் விடுவதில்லை.

சனி பிறப்பு: சனி பகவானின் பத்தினியின் பெயர் நீலா தேவி. காகம் வாகனமாக கொண்ட இவருக்கு உகந்த நிறம் கருநீலம். இவர் வாசம் செய்யக்கூடிய திசை மேற்கு. இவர் மனித உடலில் நரம்பு மண்டலம், பித்தம் ஆகியவற்றை ஆள்பவர் ஆவார். கணபதி அனுமனை வழிபட்டால் சனியின் பாதிப்புகள் குறையும்.