வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 மார்ச் 2023 (19:01 IST)

சனிதோஷம் நீங்க உடனே செல்ல வேண்டிய கோவில் இதுதான்..!

saneeswarar
சனி தோஷம் நீங்குவதற்கு உடனடியாக நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே உள்ள அக்னீஸ்வரர் கோயிலுக்கு செல்ல வேண்டும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
நான்கு புறமும் அகழி சூழ்ந்திருக்கும் இந்த அக்னீஸ்வரன் கோவிலில் வழிபாடு செய்தால் சனி தோஷம் நீங்கிவிடும் என்றும் அதுமட்டுமின்றி வீடு கட்டும் பணி எந்த விதமான தடையும் இன்றி நடக்கும் என்றும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 
 
சனி தோஷம் இருந்தால் வீடு கட்டும் போது பல தடைகள் வரும் என்ற நிலையில் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால் அனைத்து தடைகளும் நீங்கிவிடும் என்று கூறப்படுகிறது. 
 
மேலும் திருமண தடை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் இந்த கோயிலுக்கு வந்து பல வழிபாடு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இருந்து நாகப்பட்டினம் சென்று அங்கிருந்து திருமருகல் வழியாக இந்த கோவிலை அடையலாம். நாகப்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து இந்த கோவிலுக்கு செல்ல 24 கிலோமீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran