1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 11 டிசம்பர் 2024 (13:36 IST)

பிரபஞ்சம் தோன்றியதில் இருந்து இருக்கும் மலை திருவண்ணாமலை..!

திருவண்ணாமலை என்பது பிரபஞ்சம் தோன்றியதில் இருந்தே இருக்கும் மலை என்றும், இந்த மலை ஆன்மீக பூமி மட்டுமின்றி சித்தர்கள் வாழும் பூமியாகவும் இருக்கிறது என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த மலை ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு விதமாக காட்சி தருவதாகவும், திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் வழக்கம் எப்போது தோன்றியது என்ற துல்லியமான தகவல் இதுவரை இல்லை என்றும் கூறப்படுகிறது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் எத்தனையோ சிவ ஆலயங்கள் இருந்தாலும், சித்தர்கள் பலரும் தவம் செய்யும் மற்றும் ஜீவசமாதி அடையும் ஒரே இடமாக திருவண்ணாமலை உள்ளது என்றும் கூறப்படுகிறது. 'அண்ணுதல்' என்றால் நெருங்குதல் என்று பொருள். 'அண்ணாமலை' என்றால் நெருங்கவே முடியாத இடம் என்ற பொருளை தரும் வகையில் இந்த மலை உள்ளது என்றும் கூறப்படுகிறது.

பிரம்மா, விஷ்ணு ஆகிய இருவரும் எப்படி சிவனின் அடியையும் முடியையும் நெருங்க முடியாததை குறிக்கும் வகையில் 'அண்ணாமலை' என்ற பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. 'அருணம்' என்றால் சிவப்பு நிறத்தில் இருக்கும் நெருப்பு; 'சலம்' என்றால் மலையை குறிக்கும். எனவே, 'அண்ணாமலை' என்றால் நெருப்பாக இருக்கும் மலையை குறிக்கும் என்பதால், இது அக்னி தலம் என்றும் கூறப்பட்டு வருகிறது. சிவனே மலையாக அமைந்திருக்கும் சிறப்புமிக்க மலை தான் அண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran