1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2024 (17:48 IST)

ஸ்ரீ அத்தனூர் அம்மன் கும்பாபிஷேக விழா கோலாகலம்..

Kumbabisegam
திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் காட்டுப்புத்தூர் காந்தி நகரில் உள்ள ஸ்ரீ அத்தனூர் அம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான கலந்து கொண்டனர்.
 
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூரில் காந்தி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அத்தனூர் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
 
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாமக்கல் தமிழ்செல்வன் ஸ்தபதி குழுவினரால் கோவில் புதுப்பிக்கப்பட்டு  ஸ்ரீ ராமசமுத்திரம் காவிரிக்கு சென்று பக்தர்கள் பெண்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர்.
 
பின்பு கணபதி, லட்சுமி, நவகிரக, ஹோமங்கள், முதலியவை விக்னேஸ்வர பூஜை, புண்யாகம், வாஸ்து பூஜை நடைபெற்றது. பின்பு ஸ்ரீ அத்தனூர் அம்மனுக்கு பெண்கள் காட்டுப்புத்தூர் மகா மாரியம்மன் கோவிலிருந்து  முளைப்பாரி எடுத்து வந்தனர்.
 
அதன் பின்பு ரஷபந்தனம், யாகசாலை பிரவேசம் முதல் கால யாகசாலை பூஜை ஹோமங்கள்  நடைபெற்றது.  இரண்டாம் கால யாகசாலை பூஜை மற்றும் மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் மற்றும் நான்காம் கால யாகசாலை பூஜை காட்டுப் புத்தூர் சிவஸ்ரீ செல்வ வாகீஸ்வர சிவாச்சாரியார் குழுவினரால்  சிறப்பாக   நடைபெற்று கடம்புறப்பட்டு  ஸ்ரீ அத்தனூர் அம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷே விழா சிறப்பாக நடைபெற்றது.   

 
அப்போது ஸ்ரீ அத்தனூர் அம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு  மகா தீபாரதனை மற்றும் சிறப்பான அன்னதானம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழா  அனைத்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ அத்தனூர் அம்மன் கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் தலைக்கிராம ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.