1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (14:08 IST)

பிரதோஷ காலத்தில் சொல்லவேண்டிய சிவமூர்த்தி ஸ்தோத்திரம் !!

Lord Shiva
பிரதோஷ காலத்தில் அந்த சிவபெருமானின் ஆசியை முழுமையாக பெறுவதற்கு இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். பிரதோஷ தினத்தன்று பிரதோஷ காலமான 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் இந்த பிரதோஷ கால மந்திரத்தை ஏதாவது ஒரு சிவ ஆலயத்திற்கு சென்று கண்களை மூடி ஒரு நிமிடம் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை 11 முறை சொல்லி, பின்பு இந்த சிவமூர்த்தி ஸ்தோத்திரத்தை உச்சரிக்க வேண்டும்.


இந்த மந்திரத்தோடு சேர்த்து சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறந்தது.

சிவமூர்த்தி ஸ்தோத்திரம்:

ஓம் சிவசிவ சிவனே சிவபெருமானே போற்றி போற்றி விரைவினில் வந்தருள் விமலா போற்றி போற்றி.
ஓம் மஹா, ஈசா மகேசா போற்றி போற்றி மனதினில் நிறைந்திடும் பசுபதியே போற்றி போற்றி.
ஓம் மூவுலகிற்கதிபதியே முதல்வா போற்றி போற்றி மூவா இளமையருளும் முக்கண்ணா போற்றி போற்றி
ஓம் ஐந்தெழுத்தின் உட்பொருளே போற்றி போற்றி திரு ஐயாறமர்ந்த குருபரனே போற்றி போற்றி.
ஓம் சத்தியமே சத்தியத்திற்கோர் திருமுகமே போற்றி போற்றி.
ஓம் உமையொருபங்கா போற்றி போற்றி அதற்கு மோர்த்திருமுகமே போற்றி போற்றி.
ஓம் உலகமே நாயகனே லோக நாயகா போற்றி போற்றி அகோரத்திற்கோர் திருமுகமே போற்றி போற்றி.
ஓம் உருத்திர பசுபதியே போற்றி போற்றி.
ஓம் உருத்திர தாண்டவ சிவனே போற்றி போற்றி.
ஓம் ஓம் அகோர மூர்த்தியே லிங்கமே போற்றி போற்றி அதற்கு மோர்திருமுகமே போற்றி போற்றி.
ஓம் உமையே அம்பிகையே அம்பிகையின் பாகா போற்றி போற்றி அம்பிகைக்கோர் முகமே அம்பிகா பதியே போற்றி போற்றி.
ஓம் பஞ்சாட்சரனே பஞ்சமுகங் கொண்ட பரமனே போற்றி போற்றி.
ஓம் சாம்பசிவ சதா சிவனே சத்குருவே போற்றி போற்றி.
ஓம் ஜடையுடைய ஜடாதரனே ஜம்பு நாதா போற்றி போற்றி.
ஓம் சந்திரனை சூரியனை நெருப்பைக் கொண்ட முக்கண்ணா போற்றி போற்றி.
ஓம் கங்காதரனே கங்களா போற்றி போற்றி.
ஓம் இடபத்தூர்ந்து செல்லும் இறைவா போற்றி போற்றி ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ.