புரட்டாசியை ஏன் பெருமாள் மாதம் என்று சொல்கிறார்கள் தெரியுமா?
புரட்டாசி மாதம் என்பது ஒரு புனிதமான மாதம் என்பதும் குறிப்பாக பெருமாளுக்கு உகந்த மாதம் என்றும் ஆன்மீகவாதிகள் கூறுவார்கள்.
புரட்டாசி மாதத்தில் தான் கன்னியில் சூரியன் வந்து அமர்கிறார் எனவே தான் இந்த மாதத்தில் பெருமாளுக்குரிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் என்று அனைத்தும் நடைபெறுகின்றன என்று கூறப்படுகிறது.
புதனின் அம்சமாக பெருமாள் இருப்பதால் புரட்டாசி மாதத்தை பெருமாளுக்கு உரிய மாதமாக ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் திருப்பதியில் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது என்பதும் குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran