திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Updated : வியாழன், 20 ஏப்ரல் 2023 (22:16 IST)

திருவண்ணாமலை கோயிலில் மே 4 ஆம் தேதி தங்கக்கொடி நிகழ்ச்சி!

thiruvannamalai annamalaiyar
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வரும் 24 ஆம் தேதி சித்திரை வசந்த  உற்சவம் நடைபெறவுள்ளது.
 
திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற கோயில் அருணாசலேஸ்வர் கோயில் ஆகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் வசந்த உற்சவ விழா  நடத்தப்பட்டடு வருகிறது.
 
இந்த ஆண்டிற்கான வசந்த உற்சவ விழா  24 ஆம் தேதி பந்தக்கால் முகூர்த்தத்துடன்  தொடங்கவுள்ளது. இதற்காக அன்று மாலை 4 மணி முதல் மாலை 5.25 வரை கோயில் பிரகாரத்தில் சம்மமந்த வி நாயகர் பிரகாரத்தில், பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறும் என்றும்,  25 ஆம் தேதி தொடங்கி மே 4 வரை அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும்  தினமும்  சிறப்பு அலங்காரம் நடைபெறும் என்றும் அபிஷேகம் மற்றும் இரவில் சுவாமிக்கு மண்டகபடி, வீதி உலா நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
 
மேலும், மே 4 ஆம் தேதி அய்யங்குள்ளத்தில் தீர்த்தவாரியும், இரவில் கோபால விநாயகர் கோயிலில் மண்டகப்படி நடக்கும் எனவும்,  நள்ளிரவு 12 மணிக்கு கோவில் 3 ஆம் பிரகாரத்தில் தங்கக்கொடி நிகழ்ச்சியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.