வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala

கோவில் வழிபாட்டின் போது நாம் கடைப்பிடிக்கவேண்டிய முக்கிய செயல்கள்!

ஆன்மிகத்துக்கு பல முகங்கள் உண்டு. அவர்றில் ஒன்று கோவில் வழிபாடு. இருக்கும் இடத்தில் இருந்து பூசை செய்ய  முடியாதவர்களுக்கு கோவில் ஒரு வரப்பிரசாதாம். அங்கு சென்றால் நடந்து கொள்ளவேண்டிய முரைகளை பற்றி பெரியவகள் கூறுவன்வர்றை பார்ப்போம்.

 
* கண்டிப்பாக தலைக்கு குளித்துவிட்டு, அசுத்தமின்றி, நெற்றியில் விபூதி, குங்குமம் அல்லது சந்தனம் தரித்துதான் கோலிலுக்கு  செல்ல வேண்டும்.
 
* கோவில் பூசைக்கு அல்லது இரைவனுக்கு என்று கொடுக்கப்பட்ட எதையும், தொடுவதோ, நமக்கென எடுத்துக் கொள்வதோ  கூடாது.
 
* கோவிலில் காணப்படும் கொடி மரத்தை தொட்டு வணங்க கூடாது. கொடிமரத்துக்கு பின்னால் மட்டும் தான் கீழே விழுந்து  வணங்கலாம்.
 
* கோவிலில் சன்னதியில் இறையை தரிசனம் செய்யும் போது முதலில் பாதத்தை தரிசனம் செய்து மனதில் நிறுத்தியபின்,  முகத்தை தரிசனம் செய்ய வேண்டும்.
 
* பூ, சந்தனம், விபூதி போன்ற பிரசாதகளை இரு கை நீட்டி வாங்கிக்கொள்ளவேண்டும். அவை நம் கை விட்டு கீழே சிந்தாமல்,  சிதறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
 
* வெளிச்சம் இல்லாத பொது உணவு உண்ணக்கூடாது, சாப்பிடும் போது மின்சாரம் தடைபட்டு வெளிச்சம் போய்விட்டால்  விளக்கேர்றி வைத்து அந்த வளிச்சத்தில் சாப்பிட வேண்டும்.
 
* பூசை அறையிலோ, வீட்டிலோ விளக்கு எரிந்து கொண்டிருந்தால் யாரேனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் விளக்கை நிறுத்தக்  கூடாது.