திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (10:54 IST)

ஒவ்வொரு மாதத்தில் வரும் ஏகாதசியும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏன் தெரியுமா...?

Ekadasi
சுவர்க்க லோக மன்னனான இந்திரனை வென்று சுவர்க்க லோகத்தைக் கைப்பற்றினார். பிறகு இந்திரன், மற்ற தேவர்கள் மற்றும் முனிவர்களுடன் பகவான் கிருஷ்ணரை அணுகினர்.


அவர்களின் பிரார்த்தனைக்கு இணங்கி பகவான் கிருஷ்ணன் ஒரு குள்ள பிராமணர் உருவெடுத்து, பிரம்மச்சாரி போல் உடைஅணிந்து பலி மகாராஜா  யாகசாலைக்கு சென்றேன் நான் பலி ராஜாவிடம் மூன்றடி நிலத்தை தானமாகக் கேட்டேன். பலி என்னை மூன்றடி நிலத்தை விட அதிகமாக ஏதேனும் கேட்கும்படி வேண்டி னார். இருப்பினும் நான் கேட்ட மூன்றடி நிலத்திலேயே நான் திருப்தி அடையும் நோக்கத்தை வெளிப்படுத்தினார்.

மன்னர் பலி மற்றும் அவர் மனைவி விந்தியாவலி எனக்கு மூன்றடி நிலத்தை தானமளித்தனர். பகவான் வாமன தேவர் தன் உருவத்தை விரிவடைய தொடங்கினார். தன்னுடைய ஒரு அடியில் பாதாளத்திலு ள்ள ஏழு லோகங்களும் அடங்கின பிறகு வாமன தேவர் தன் மூன்றாவது அடியை வைக்க இடத்தை கேட்டபோது பலி மகா ராஜா கைகூப்பி வணங்கி தன சிரத்தை அர்ப்பணித்தார்.

வாமனதேவர் தன் மூன்றாவது அடியை பலி மகாராஜாவின் தலையில் வைத்தார். பலி மகாராஜாவின் விநயத்தால் நான் திருப்தி அடைந்து நான் எப்பொழுதும் அவருடன் வசிப்பதாக வரமளித்தேன்.

ஆவணி மாத வளர்பிறையில் தோன்றக் கூடிய இந்த ஏகாதசி நாளன்று பலி மகா ராஜாவின் அரண்மனையில் வாமன தேவரின் திருவுருவ சிலை ஸ்தாபிக்கப்பட்டது. பாற்கடலில் ஆனந்த சேஷ படுக்கையில் சயன கோலத்தில் இருக்கும் என்னுடைய மற்றொருதோற்றமும் ஸ்தாபிக்கப்பட்டது.

சயன ஏகாதசி துவங்கி உத்தன்ன ஏகாதசி வரை முழு முதற்கடவுள் சயனிப்பார். ஒருவர் இந்த நான்கு மாதங்களிலும் பகவானை விசேஷமாக வழிபட வேண்டும். ஒருவர் ஒவ்வொரு ஏகாதசியையும் சிரத்தையுடன் அனுஷ்டிக்க வேண்டும். இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவர் ஆயிரம் அஸ்வமேத யாகங்களின் பலனை அடைவார்.