செவ்வாய், 19 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (13:34 IST)

இந்த நேரத்தில் விளக்கு ஏற்றினால் என்ன நன்மைகள் தெரியுமா...?

எப்போதும் வீட்டின் முன்கதவைத் திறந்து, பின்புறக்கதவை சாத்தியபிறகே விளக்கேற்ற வேண்டும். அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஆறரை மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலனும் நிச்சயம்.


விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.

விளக்கேற்றும் நேரம்: சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம்.

விளக்கேற்றும் பலன்:

ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்.
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்.
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்.
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்.
ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும் உண்டாகும்.

விளக்கேற்றும் திசையும் பலன்களும்:

கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி உண்டாகும்.
மேற்கு - கடன், தோஷம் நீங்கும்.
வடக்கு - திருமணத்தடை அகலும்.
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.

திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.