வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2022 (10:40 IST)

அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கலாமா...?

Mahalaya Amavasya
அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையொன்று சந்தித்துக் கொள்கிறது அன்று  முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள்.


தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில்  கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும்  செய்கிறார்கள்.

பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அது நல்லநாளே.

ஒரு வருடம் இரண்டு அயணங்க ளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில், உத்தராயணம் மிகச் சிறந்த புண்ணிய காலமாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பீஷ்மர், இந்த உத்தராயன புண்ணிய காலம் வரும்வரை காத்திருந்து தனது உயிரைத் துறந்தார் என்று மகாபாரதம் சொல்கிறது.

தை மாதம் முதல் ஆனி மாதம் வரை ஆறு மாதங்கள் உத்தராயண புண்ணிய காலம். இதில், ஆனி மாதம் கடைசி மாதம். அதில் வருகின்ற அமாவாசைக்கு ஒரு சிறப்பு உண்டு. அதிக நாட்கள் அதாவது, 32 நாட்கள் உள்ள மாதம் ஆனி மாதம். அமாவாசை  செவ்வாய்கிழமை வருகிறது. இதில் அமாவாசைக்கு முதல் திதியான சதுர்த்தசியும் செவ்வாய் கிழமையும் கலந்து வருவதால் இந்த புண்ணிய தினத்தை கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி தினமாக அனுஷ்டிக்கின்றனர். செவ்வாய்க்கிழமையும் தேய்பிறை சதுர்த்தசியில் சேர்ந்தால் அந்த நாள் ரொம்ப விசேஷமான நாள். சாபங்களையும் பாபங்களையும் துடைத்து தூய்மையாக்கும் நாள்.