வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By
Last Updated : வியாழன், 22 மார்ச் 2018 (14:22 IST)

விநாயகருக்கு அர்ச்சனைக்குரிய இலைகள்

விநாயகப் பெருமானே மூலமுதற் பொருள். எந்தச் செயலைச் செய்தாலும் விநாயகப் பெருமானை வழிப்பாடு செய்து தொடங்குவது நம் மரபு.



விநாயகருக்கு அருகப்புல் உகந்தது. இதுதவிர, அவரது பூஜைக்குரிய மேலும் சில இலைகளையும், அதற்கான பலன்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

மருத இலை - மகப்பேறு உண்டாகும்.

எருக்க இலை - குழந்தை பாக்கியம் உண்டாகும்.

அரச இலை - எதிரி தொல்லை நீங்கும்.

அகத்தி இலை - கவலை விலகும்.

அரளி இலை - அன்பு நிலைக்கும்.

வில்வ இலை - இன்பம் பெருகும்.

வெள்ளெருக்கு - சகல சவுபாக்கியம்.

மாதுளை இலை கீர்த்தி உண்டாகும்.

கண்டங்கத்திரி இலை - லட்சுமி கடாட்சம்.