ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் என்ன...?

பொதுவாகவே புரோட்டீன் பற்றாக்குறை, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, சத்துக்கள் தேவையான அளவு உடலில் இல்லை என்றால் முடியின் வளர்ச்சி தடைபடுகிறது.


காலை எழுந்தவுடன் பல் தேய்த்துவிட்டு 1 டம்ளர் அளவு தண்ணீரைக் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. டீ காபிக்கு பதிலாக  சத்துமாவு கஞ்சியைக் குடிக்கலாம். காலை இட்லி தோசைக்கு பதிலாக கம்பு மாவு, கேழ்வரகு மாவு, வரகு, தினை இப்படிப்பட்ட சிறு தானியங்கள் சேர்க்கப்பட்ட  உணவை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
 
குறிப்பு: தேவையான பொருட்கள்: பாதாம் பருப்பு - 4, ஆளி விதைகள் - 1 டேபிள்ஸ்பூன், நெல்லிக்காய் - 1, பேரிச்சம் பழம் - 2, சிறிய கேரட் - 1. இதில் பாதாம்  பருப்பையும், ஆளி விதை களையும் ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு,முந்தைய நாள் இரவே ஊறவைத்துக் கொள்ளவேண்டும். மறுநாள் காலை ஒரு மிக்ஸி ஜாரை  எடுத்து ஊறவைத்த பாதாம் பருப்புகளையும், ஆளி விதைகளையும் தண்ணீரோடு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன்பின்பு பேரிச்சம்பழம் நெல்லிக்காயில்  உள்ள கொட்டை மட்டும் நீக்கிவிட வேண்டும். 
 
கேரட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் விட்டோ அல்லது பால் விட்டோ, இந்த ஜூஸை அரைத்து, வடிகட்ட கூடாது.  அப்படியே குடித்து விடவேண்டும். தேவைப்பட்டால் நாட்டு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கலந்து இதை குடிப்பது முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. 
 
இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டிருக்கும் ஆளிவிதையில் ஒமேகா-3 சத்து அதிகமாக உள்ளது. முடி வளர்ச்சிக்கு அவசியமாக தேவைப்படும் இந்த சத்து கொண்ட ஆளி விதைகளை தினமும் மேல் சொன்ன ஜூஸில் தான் கலந்து சாப்பிட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. விருப்பம்போல் தயாரித்துக்கொள்ளலாம்.