1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

சருமத்தின் நிறத்தை அதிகரிக்க செய்யும் குறிப்புகள் !!

கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் சேர்த்து நன்மை பயக்கும். 

கொண்டைக்கடலையை அரைத்து முகத்தில் மாஸ்க் போட்டு வந்தால், வயது முதிர்ந்த தோற்றத்தைத் தவிர்த்து சருமத்தை அழகூட்டும்.
 
தயிர் எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவுப்பொருள். இது ஏராளமான சருமப் பிரச்னைகளைத் தீர்க்கும். தயிர் சருமத்துக்கு சிறந்த மாய்ச்சரைஸராகவும்  கரும்புள்ளிகளைப் போக்கவும் பயன்படுகிறது.
 
புளியுடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கிய பின், சிறிதுநேரம் குளிரவைத்து முகத்தில் அப்ளை செய்யலாம். புளியில் உள்ள வைட்டமின் சி  மற்றும் பி3 சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் வைத்திருக்கும். சருமத்தின் நிறத்தை அதிகரிக்கச் செய்யும். 
 
புளியை கொதிக்க வைத்த நீரை தலைமுடியை அலசப் பயன்படுத்தினால் தலைமுடியை பிசுபிசுப்பிலிருந்து காக்கும். 
 
எலுமிச்சையை முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் நன்கு தேய்க்க வேண்டும். இது சருமத்துக்குப் பொலிவைத் தரும். எலுமிச்சை சருமத்தில் உள்ள இறந்த செல்களைப் புதுப்பிக்கவும் செய்யும்.
 
தேன் மிகச்சிறந்த ஆன்டி- பாக்டீரியலாகப் பயன்படுகிறது. இது வறண்ட, எண்ணெய் பசையுள்ள என எல்லா வகையான சருமத்துக்கும் ஏற்றது.