1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

இறந்த சரும செல்களை நீக்க உதவும் சர்க்கரை !!

சருமத்தில் இருக்கும் அழுக்கை நீக்க சர்க்கரை மட்டும் பயன்படுத்தினாலே போதும். இது முகத்திற்கு நிறத்தை தருவதோடு மட்டுமல்லாமல் முகத்தில் இருக்கும் அழுக்குகள், தூசுகள் மற்றும் இறந்த சரும செல்களை நீக்க உதவுகின்றது.

தேவையானவை: சர்க்கரை - 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு - 5 சொட்டு, ஆலிவ் ஆயில் - 3 சொட்டு. சர்க்கரை, எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை  சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளுங்கள். 
 
பின்பு இதை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். அரை மணி நீரை ஊற வைத்து, பின்பு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். இதை தொடர்ந்து வாரத்திற்கு  2 முறை செய்து வந்தால், முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் கருமை நிறம் நீங்கி முகம் பளபளவென மாறிவிடும்.
 
எலுமிச்சை சாறு தோல் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் தோல்கள் ஆகியவற்றை நீக்கி, உங்கள் முகத்திற்கு நல்ல பளபளப்பை கொடுக்கும்.
 
ஆலிவ் ஆயில் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. மட்டுமல்லாது சர்க்கரை முகத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்க உதவுகின்றது.
 
இறந்த சரும செல்களானது, சருமத்தில் இருக்கும் துவாரங்கள் வழியே வெளியேறும். அந்த துவாரங்களில் தூசு மற்றும் அழுக்குகள் படிந்திருந்தால், இறந்த செல்கள் வெளியேறாமல் அங்கேயே தங்கிவிடும். இதனால் சருமம் கடினமாகி, சொரசொரப்புடன் காணப்படும். 
 
எளிதில் வயதான தோற்றம் வந்துவிடும். இதை தவிர்க்க உங்களுக்கு சர்க்கரை பேஸ் பேக் உதவுகின்றது.