புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு முகத்தை வெள்ளையாக மாற்ற சில குறிப்புகள்...!!

கருப்பாக இருப்பவர்கள், முழங்கை மற்றும் முழங்கால் பகுதியை வெள்ளையாக மாற்ற நினைப்பவர்கள், அழகாக இருந்தாலும் முகத்தில் இருக்கும் தழும்புகளை பிரச்சினையாக நினைப்பவர்கள் இதை முயன்று பார்க்கலாம்.

அரிசி மாவு, பால், எழுமிச்சை சாறு. முதலில் ஒரு கைப்பிடி அரிசியை ஊறவைத்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். 15 நிமிடம் ஊறவைத்தால் போதுமானது.  அதனுடன் பால் சேர்த்து பேஸ்ட் போல் ஆக்கிக் கொள்ளுங்கள்.
 
எலுமிச்சை சாறை பிழிந்து அதைப் பஞ்சினால் நனைத்து முகம், கழுத்து, முழங்கால், முழங்கை போன்ற பகுதிகளில் மசாஜ் செய்து கொள்ளவும். பின் குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவிக் கொள்ளவும். இதனால் முகத்தில் படிந்துள்ள அழுக்குகள் கிருமிகள் போன்றவை நீங்கி விடும். 
 
பிறகு அரிசி மாவையும், பாலையும் சேர்த்து ஒன்றாக கலந்து பேஸ்ட் போல் செய்து வைத்திருப்பதை முகம், கழுத்து, முழங்கை, முழங்கால் போன்ற பகுதிகளில் பேக் போல் தடவிக் கொள்ளுங்கள். நன்கு காய்ந்து ஈரப்பதம் வற்றியதும் சாதாரண தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து கொண்டு விடுங்கள்.
 
அரிசி மாவு சிறந்த ஸ்க்ரப்பராக நம்முடைய தோல் பகுதிக்கு இருக்கும். பால் முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய்யை நீக்கும். எலுமிச்சை நுண்கிருமிகளை அழித்து முகத்தை சுத்தமுடன் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இந்த மூன்றையும் கலந்து முகத்திற்கு தினமும் ஸ்கரப் செய்து  வந்தால் முகம் பளிச்சென்று ஜொலிக்கும்.
 
முகம், கழுத்து, கை, கால், முழங்கை, முழங்கால் பகுதிகளில் இருக்கும் கருமையும் நீங்கி விடும். ஒரு வாரம் செய்து விட்டு நிறுத்தி விடாதீர்கள். உங்கள் பிரச்சினை தீரும் வரை தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் தான் முழுமையான பலனை அடைய முடியும்.