ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By

இயற்கையான முறையில் முகத்தை பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள்....!

வெந்தயத்தை நான்கு தேக்கரண்டி அளவு எடுத்து மிதமாக வறுத்து, மிக்ஸியில் பொடித்து வெந்நீரில் ஊறவைத்து, அதனுடன், கால் கப் அளவு தயிர் கலந்து தலையில் தடவி 15 நிமிடம் ஊறவிட்டு அலசவும்.
காய்ச்சாத பாலை கை, கால்களில் தடவி அரை மணி நேரம் ஊறிய பிறகு கழுவினால் சொரசொரப்பு தன்மை நீங்கி மிருதுவாகும்.
 
முக சுருக்கங்களை போக்க முட்டையின் வெள்ளைக்கருவில் தேன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கடலைமாவு கொண்டு கழுவிவிடவும், தொடர்ந்து செய்து வந்தால் ஓரிரு வாரங்களில் சுருக்கம் போய்விடும்.
 
ஆரஞ்சு பழத்தோல் பொடியை தயிரில் கலந்து முகம், கழுத்து பகுதிகளில் தடவிவர முகம் பளிச்சென்று இருக்கும்.
 
1 தேக்கரண்டி ஆரஞ்சு பழச்சாறை, 1 தேக்கரண்டி குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறிய பிறகு மிருதுவாக துடைத்தால், எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.
 
தினமும் இரவு படுக்கும் முன் கண் இமைகளிலும் புருவங்களிலும் விளக்கெண்ணெய் தடவி வர கண்கள் அழகு பெறும்.
 
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும், சந்தனமும் அரைத்து உடலில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
 
முகப்பரு தழும்பு மாற புதினா சாறு 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், பயத்தம் பருப்பு மாவு இவற்றை கலந்து போட்டால் தழும்பு மாறும்.
 
பாலை காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி அந்த வியர்வையை துடைக்காமல் காயவிட்டு, அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.
 
பெண்கள் கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும்.