1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

பருக்கள் வருவதை தடுக்க உதவும் இயற்கை அழகு குறிப்புகள் !!

கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி வந்தாலே, முகத்தில் பருக்கள் வருவதைத் தடுக்கலாம். மேலும் கற்றாழை ஜெல் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பருக்களால் ஏற்பட்ட தழும்புகளையும் நீக்கும்.

மஞ்சளை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, பருக்கள் வரும் பகுதியில் இரவில் படுக்கும் போது தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவவேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் பருக்கள் காணாமல் போய்விடும்.
 
எலுமிச்சை சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்தில் உள்ள எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தி, பருக்கள் வராமல் செய்யும். அதற்கு எலுமிச்சை சாற்றினை  பருக்கள் மீது தடவி உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
 
ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அல்கலைன் தன்மை, முகப்பருவை போக்க உதவும். அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சரிசம அளவில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இச்செயலால் பருக்கள் மறைவதோடு, பருக்களால் ஏற்படும் தழும்புகளும் நீங்கும்.
 
தக்காளியிலும் சிட்ரிக் அமிலம் உள்ளது. எனவே தக்காளியைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து வர, பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.
 
தேனில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை ஏராளமாக உள்ளதால், இதனை பருக்களின் மீது தடவி உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, பருக்கள் வரும் வாய்ப்புக்கள் குறையும்.