செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (17:21 IST)

முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் பற்றி பார்ப்போம் !!

தேவையான அளவு சிறிய வெங்காயங்களை உரித்து வைத்துக் கொள்ளவும். இவற்றை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கி அதனை சாறு எடுத்து தலை மற்றும் முடிக்குப் பூசவும். இந்த முறையை மாதம் 1 முதல் 2 தடவைகள் பின்பற்றுவது நல்ல பலனைத் தரும்.


வெங்காயத்தில் உள்ள சல்பர் முடி வளர்ச்சியைத் தூண்டும் தன்மை கொண்டது. இந்த சல்பர் குறிப்பாக முடி பிளவுபடுவதைத் தடுக்க துணைபுரியும். மேலும் இளநரை ஏற்படுவது தவிர்க்கப்படும். பொடுகு, பேன், தொல்லை, பூஞ்சை தொற்று போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் வெங்காயம் சிறந்து நிவாரணி ஆகும்.

கொத்தமல்லித் தழைகளைக் கழுவி ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். இதனை அரைத்து சாற்றை வடித்து எடுத்துக் கொள்ளவும். இதனை தலையில் பூசி அரைமணிநேரம் ஊறவைத்து விடுங்கள். பிறகு முடியினை ஷாம்பு கொண்டு நன்கு அலசவும். இதை வாரம் ஒரு முறை செய்யவும். முடி கருமையாகவும், பளபளப்பாக மாறி, அடர்த்தியாக வளரத் தொடங்கும்.

ஐந்து இதழ்கள் கொண்ட சிவப்பு செம்பருத்திப் பூவை பறித்துக் கொள்ளவும். இவற்றை அரைத்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யில் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.இதைத் தலை முடிக்குத் தினம் தேய்த்து வரத் தலைமுடி செழிப்பாக வளர தொடங்கும்.

செம்பருத்தி இலைகளைப் பறித்து அரைத்து தலையில் தடவிக் கொள்ள வேண்டும். இதை அரைமணி நேரம் ஊறவைத்து ,பின்பு ஷாம்பு கொண்டு முடியை நன்றாக அலச வேண்டும். இந்த முறையை வாரம் ஒருமுறை செய்து வர முடி அடர்த்தியாக வளரத் தொடங்கும்.