பளபளப்பான முடியை பெற ஹேர் மாஸ்க் செய்வது எப்படி...?
பச்சைப்பயறு உணவில் சேர்த்து கொள்வது முடியின் வலிமையை மேம்படுத்தி உடைவதைத் தடுக்கிறது.
பச்சைப்பயறு உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் மயிர்க்கால்கள் மற்றும் உச்சந்தலைக்கு நன்கு ஊட்டமளிக்கிறது.
பச்சை பயறு பயன்படுத்துவதன் மூலம் முடியின் அமைப்பை மேம்படுத்தவும், காலப்போக்கில் தடிமனாகவும் வலுவாகவும் மாற்ற முடியும்.
முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம் பல உள்ளன. அவற்றில் பச்சை பயறு பயன்படுத்தும் முறையும் ஒன்றாகும். பச்சை பயரை இரவு முழுவதும் அல்லது முளை கட்டும் வரை நீரில் ஊற வைத்து சூப் செய்யலாம் அல்லது சர்க்கரை சேர்த்து அப்படியே சாப்பிடலாம். உணவாக உட்கொள்வது அவற்றில் உள்ள சத்துக்களை பெற எளிய வழி ஆகும்.
ஹேர் மாஸ்க் செய்முறை:
பச்சை பயறை பொடி செய்து கொள்ளவும். கிரீன் டீ யின் சில துளிகள் தேவையான அளவு சேர்த்து பேஸ்ட் போன்று தயாரித்து கொள்ளவும்.
ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய்யை சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு சுமார் 2 அல்லது 3 தேக்கரண்டிகள் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த பச்சை பயறு பேஸ்ட்டை முடியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலையை சுத்தம் செய்யவும்.