செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (12:27 IST)

எப்போதும் முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவும் சில ஃபேஷியல்கள் !!

Facial Glow
பெண்கள் பொதுவாக தங்களுடைய முகத்தை எப்போதும் பளபளப்பாகவும், புத்துணர்ச்சியோடு வைத்திருக்க முயல்வார்கள். இதற்காகவே பியூட்டி பார்லர்கள் சென்று ஃபேஷியல் செய்கின்றனர். இவ்வாறு தங்களது சருமத்திற்கு ஏற்ப ஃபேஷியல்கள் செய்யும் போது இறந்த செல்களை வெளியேற்றி முகத்தை புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது.


எந்த பேஷியல் செய்வதற்கு முன்பும் இந்த பேசிக் கிளினிங்கை செய்வது அவசியம். பழங்கள் உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் மிகவும் சிறப்பானது. பழங்களை கொண்டு பேஷியல் செய்து நமது அழகை பாதுகாக்கலாம்.  பழ பேஷியலிலும் பல்வேறு வகைகள் உள்ளன.

உலர்ந்த சருமத்திற்கு பாதாம் எண்ணெய் தேய்த்து வந்தால் நல்லது. பருக்கள் குழி அடையாளங்களையும் பாதாம் ஆயில் நாளடைவில் நீக்கிவிடும். ஆயில் கிடைக்காவிடில் பாதாமின் தோலுடன் 5 எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்து தினமும் முகத்தில் தேய்க்கலாம்.

பச்சை நிற ஆப்பிளின் சாறு தோல் சுருக்கம், அரிப்பு, வெடிப்பு அனைத்திற்கும் மிக நல்லது. தேனில் பால், தயிர், அரைத்த எள்ளு எல்லாம் சரிசமமாக கலந்து தேய்த்து வந்தால் முகம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் ஆகும்.

1 தேக்கரண்டி கடலெண்ணெய்யில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வந்தால் பரு, கரும்புள்ளிகள் வரவே வராது. கண்களுக்கு கீழே கருவட்டத்தை நீக்க மஞ்சளில் அன்னாசி சாறு சேர்த்து தேய்த்து வரவும்.