Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முகம் பளிச்சிட இயற்கையான முறையில் தயாரிக்கக் கூடிய ரோஜா ஸ்க்ரப்!

Widgets Magazine

பெண்கள் அவர்களை அழகுபடுத்தி அதில் மகிழ்ச்சி காண்பார்கள். அதற்காக என்ன விலை கொடுத்தாலும் அழகுதான  பொருட்களை பெற்றுக் கொள்ளத் துடிப்பார்கள். அவர்களுக்கு இயற்கையான பொருட்களை கொண்டு எவ்வாறு தங்களை அழகுப் படுத்தி கொள்ளலாம் என்பதனை பார்ப்போம்.
 
 
புதிதாக மலர்ந்த ரோஜா இதழ்களை கொண்டு உருவாக்கப்பட்ட ரோஸ் தண்ணீரை கரு வளையங்களை போக்கவும்,  அமைதிப்படுத்தவும் மற்றும் டோனராகவும் பயன்படுத்தலாம். இதை பல பெண்கள் அழுக்கு மற்றும் எண்ணெய் பசையை  முகத்திலிருந்து நீக்க பயன்படுத்துகிறார்கள்.
 
வெளியே செல்லும் சில மணி நேரங்களில் கூட கருமை படர்ந்துவிடும். லொஷன், க்ரீம் எல்லாம் நிரந்தர தீர்வை தராது.  இங்கே கூறியிருக்கும் ஸ்க்ரப் சருமத்தை சுத்தப்படுத்தி கருமையை அகற்றும் பண்பை கொண்டுள்ளது. வெயிலினால் கருமை  உண்டாகாமல் இருக்க ஒரு எளிய வழி இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. பயன்படுத்திப் பாருங்கள்.
 
ரோஜா இதழ்கள் - ஒரு கப், சர்க்கரை - அரை கப் எடுத்து கொள்ள வேண்டும். சுத்தமான ரோஜா இதழ்களை பிரித்தெடுத்து நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த  பொடியை 1 ஸ்பூன் எடுத்து அதனுடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தினமும் தேய்த்து கழுவவும்.
 
இவ்வாறு செய்தால் முகத்தில் உண்டாகும் கரும்புள்ளி, கருமை மற்றும் அதிகப்படியான எண்ணெய் ஆகியவை மறைந்து முகம்  பளிச்சிடும். மிருதுவாகும்.
 
கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்களிலிருந்து நீக்கப்படும் உமி, தவிடு போன்றவை அழகிற்கு அழகூட்டும் பொருட்களாகப்  பயன்படுகின்றன. வைட்டமின் ‘இ’ சத்து மிகுந்த இந்த தானியத்தின் தவிடுகள் முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, முகச் சுருக்கங்களையும் நீக்குகின்றன.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மகளிர் தினம் கொண்டாடும் வேளை பெண்ணுக்குள் கேள்விகள் ஆயிரம்!

18ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். ...

news

பெண்களை தொடரும் எழுதாத சட்டங்கள்!

என்னதான் பெண்கள் சாதித்தாலும் ஒரு தந்தை அவளை பெருமை படுத்துவார். ஆனால் அதே ஒரு கணவனால் ...

news

மகளிர் தினத்தில் பெண்மையை போற்றுவோம்!

சர்வதேச மகளிர் தினமாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்ட தினம் மார்ச் 8 1911. ஆகவே மகளிர் ...

news

முகம் பளபளப்பாக இயற்கையான முறையில் செய்யப்படும் அழகு குறிப்புகள்!!

3 தேக்கரண்டி புதினா இலைச்சாறு எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து நன்றாக ...

Widgets Magazine Widgets Magazine