வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

முகத்திலிருக்கும் தேவையற்ற ரோமங்களை நீக்கும் சில அழகு குறிப்புகள்...!!

சிறிதளவு எலுமிச்சை சாறுடன், தேவையான அளவு தேன் சேர்த்து நன்றாக குழைத்துகொள்ளவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 15-20  நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் சுத்தமடைவதோடு, தேவையற்ற ரோமங்களின் வளர்ச்சியும் படிப்படியாக குறையும்.

சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூளுடன், தேவையான அளவு பால் சேர்த்து நன்றாக குழைத்து ரோமங்களின் மீது பூசவும். இந்த கலவையை சுமார் ஒரு 10  நிமிடங்களுக்கு முகத்தில் தேய்த்து, காய்ந்த பிறகு கழுவினால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைப்படுவதோடு முகம் பட்டுப்போல் பொலிவடையும். இந்த ஸ்கரப்பை வாரத்திற்கு 3 முறை செய்ய வேண்டும்.
 
மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் பூசவும். காலையில் சுடுநீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.
 
பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் நீங்கும்.
 
கஸ்தூரி மஞ்சளை அரைத்து பாலாடை கலந்து பூசி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறையும்.
 
சிறுபயறு தோலை பசும்பாலில் கலந்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.
 
கஸ்தூரிமஞ்சள்தூள், சிறுபயறுத்தூள் இரண்டையும் சம அளவு கலந்து,தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போலாக்கி காலை, இரவு என 2 முறை முகத்தில் தேய்த்து அரை மணிநேரம் கழித்து கழுவவும். இப்படி தொடர்ந்து செய்வதால் முடி கொட்டிவிடும்.