1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Updated : சனி, 21 நவம்பர் 2015 (15:47 IST)

ஆரஞ்சு அழகு குறிப்பு

ஆரஞ்சு பழங்களை உபயோகித்து அழகு செய்யும் டிப்ஸ்கள்.


 

 
1. ஆரஞ்சுபழத்தோல்களுடன் பால் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி காயவைத்து கழுவினால் முகம் ப்ரஷ்ஷாக இருக்கும்.
 
2. கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்டியடிக்க 1 கைப்பிடி வேப்பங்கொழுந்துடன்,  ஆரஞ்சு  தோல் விழுது - கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ,  அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.
 
3. ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் என்று மூன்றும் ஒரே அளவு எடுத்து  தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம்  ப்ளிச் ப்ளிச் என்றிருக்கும்.
 
4. ஆரஞ்சு சாற்றை மட்டும் பழ பேக்காக முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும்.
 
5. ஆரஞ்சு ஜுஸ் தினமும் குடித்து வரவேண்டும். அவ்வாறு குடிக்கும் போது உடல் சிவப்பாக மாறுவதை காணலாம்.நம் தேகத்துக்கும் வசிகரத்தை அள்ளித் தரக்கூடியது.