புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

தலைமுடி உதிர்வை தடுக்கும் அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

வெந்தயம் மற்றும் குன்றிமணியை நன்றாக அரைத்து அதை சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் ஒரு வார காலம் ஊறவைத்து பின் தினமும் அந்த தேங்காய் எண்ணெய்யை தலையில் தேய்த்து வந்தால் முடி கொட்டுவது கொஞ்சம் கொஞ்சமாக குறையும். 

கறிவேப்பிலை, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை ஆகிய நான்கையும் ஒரு கப் அளவு எடுத்துக்கொண்டு நன்கு அரைக்கவும். பின் அதை சுத்தமான ஒரு கப் தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சவும். காய்ச்சிய எண்ணெய்யை ஒரு நாள் வைத்து பின் அதை வடிகட்டி வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் தேய்த்து சீயக்காய் போட்டு குளித்தால் தலை முடி கொட்டுவது நிற்கும். 
 
வேப்பிலை கொழுந்து மற்றும் துளசியை நன்கு அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் சீயக்காய் போட்டு குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். இதன் மூலம் தலை முடி உதிர்வதை தவிர்க்கலாம். 
 
உருளை கிழங்கின் மேல் தோலை சீவிவிட்டு அதை சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து சாறு எடுத்து தலையில் தடவி 20 நிமிடங்கள் வரை நன்றாக மசாஜ் செய்து பின் சீயக்காய் போட்டு குளித்தால் தலைமுடி வளர்வது அதிகரிக்கும். 
 
கற்றாழையை எடுத்துக்கொண்டு அதன் மீது படிகாரத்தை தூவினால் அதன் சோற்று பகுதியில் இருந்து நீர் பிரிந்து வந்து விடும். அந்த நீரோடு சம அளவு தேங்காய் என்னை எடுத்துக்கொண்டு இரண்டையும் கலந்து நன்கு சுண்ட காய்ச்சவேண்டும். பின் அதை தினசரி தலையில் தேய்த்து வந்தால் முடி நன்கு வளரும்.