வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By sivalingam
Last Modified: புதன், 22 மார்ச் 2017 (00:30 IST)

சாதாரண வெற்றிலையில் இத்தனை அம்சங்களா?

வெற்றிலை என்பது ஒரு மூலிகையாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். அதுமட்டுமின்றி தாம்பூலத்தில் இடம்பெறும் ஒரு மங்களகரமான பொருளும் கூட. சாதாரண வெற்றிலை என்று கூறப்படும் இது, பல நோய்களை தீர்க்கும் வல்லமை பெற்றது. இதுகுறித்து தற்போது பார்ப்போம்



 


1. அசைவ உணவு உள்பட ஹெவியான உணவு எடுத்து கொண்டீர்களா? உடனே வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு, ஏலக்காய், கிராம்பு, வால்மிளகு, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, சுக்கு, காசுக்கட்டி சேர்த்து எடுத்து கொள்ளுங்கள் எவ்வளவு கடினமான உணவு உட்கொண்டிருந்தாலும் எளிதில் செரிமானமாகும்

2. வெற்றிலையை தினமும் மென்று தின்பதால் வயிற்றில் வாய்வுக்கோளாறு ஏற்படாது. அதோடு வயிறு உப்புசம், வயிற்றுவலி போன்ற உபாதைகள் தடுக்கப்படும். அதுமட்டுமின்றி கழிவுகள் வயிற்றில் சேராமல் குடல் சுத்தப்படுத்தப்படுவதோடு, மலச்சிக்கல் ஏற்படாது.

3. தலைபாரம், மாந்தம், வயிற்றுவலி, வயிற்று உப்புசம், காணாக்கடி ஆகிய பிரச்சனைகளுக்கு வெற்றிலை சாற்றை உட்கொண்டால் அனைத்தும் பறந்துவிடும்

4. தேள் கடித்துவிட்டால் பயப்பட வேண்டாம். உடனே இரண்டு வெற்றிலைகளுடன் ஒன்பது மிளகுகள் சேர்த்து மென்று சாப்பிட்டால் தேள்கடி விஷம் முறிந்துவிடும்

5. உடலில் அரிப்பு, ஊறல், திடீர் வீக்கம் ஆகிய பிரச்சனையா? இதற்கும் வெற்றிலையால் தீர்வு உண்டு. வெற்றிலையுடன் மிளகு சேர்த்துச் சாப்பிடுங்கள். உடனே பலன் கிடைக்கும்

6. சொரி, சிரங்கு போன்ற நாள்பட்ட புண்களுக்கு  100 மில்லி தேங்காய் எண்ணெயுடன் ஐந்து வெற்றிலைகள் சேர்த்துக் காய்ச்சி தினமும் காலை - மாலை வேளைகளில் புண்கள் இருக்கும் இடத்தில் பூசி வந்தால் நாளடைவில் சரியாகிவிடும்

7. நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டால், வெற்றிலைச் சாற்றுடன் இஞ்சிச் சாறு கலந்து குடித்து வந்தால் நிவாரணம் அளிக்கும்

8. வெற்றிலையின் சாறு இரண்டு அவுன்ஸ், ஒரு சிட்டிகை மிளகுப் பொடி, அதே அளவு சுக்குப்பொடி மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் இரைப்பு, மூச்சுத்திணறல் மற்றும் ஆஸ்துமா ஆகியவை அருகே வராது.

9. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று உப்புசம் குணமாக வேண்டும் என்றால் வெற்றிலைச் சாற்றுடன் அதே அளவு துளசிச்சாறு கலந்து ஒரு டீஸ்பூன் கொடுக்க வேண்டும்

10. கடைசியில் மிக முக்கியமானது என்னவெனில் வெற்றிலையை உபயோகிக்கும்போது அதன் காம்பு மற்றும் நடுநரம்பு நீக்கி உண்டால்தான் முழுப் பலன் கிடைக்கும் என்பதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்.