Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பெண்கள் உடம்பில் உள்ள தேவையில்லாத முடியை நீக்குவது எப்படி?


sivalingam| Last Modified செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (04:49 IST)
பெண்களுக்கு அழகே முடியில்லாமல் மழுமழுவென மின்னும் தேகம் தான். ஆனால் ஒருசில பெண்களுக்கு உடல் முழுவதும் மெல்லியதாக இருக்கும் முடிகள் அவர்களுடைய அழகை குறைக்கும் வகையில் இருக்கும். இந்த முடிகளை நீக்க பெண்கள் பல்வேறு வழிகளை கடைபிடித்து வந்தாலும்  இதற்கு நிரந்தர தீர்வு உள்ளது. அது என்னவென்று பார்ப்போமா!


 


1. சாதாரணமாக சவரம் செய்து மழித்தல். ஒருவேளை மீண்டும் முளைத்தால் மீண்டும் சவரம்தான். வேறு வழியில்லை

2. இரசாயன பொருட்களை உபயோகித்து முடிகளை பிளீச்சிங் செய்வது. இதன் மூலம் முடிகளை மிக மெல்லிய நிறமாக்கி வெளியே தெரியாமல் செய்யலாம்

3. எலக்ட்ரோலைசிஸ் என்ற முறைப்படி முடிகளை வேரோடு பிடுங்குதல். இதனால் மீண்டும் முடி முளைக்காது. இந்த சிகிச்சை கொஞ்சம் காஸ்ட்லி மற்றும் நேரம் அதிகம் ஆகும்

4. லேசரை பயன்படுத்தியும் முடிகளை தனித்தனியா எடுத்து மீண்டும் முளைக்காமல் செய்யலாம். முந்தைய முறை போலவே இந்த முறைக்கும் நேரமும் பணமும் அதிகம் ஆகும்

5. ஆனால் மேற்கண்ட சிகிச்சைகள் அனைத்தும் நிரந்தர தீர்வை தருகின்றதோ இல்லையோ பக்கவிளைவுகள் மற்றும் பணம் அதிகம் செலவாகும். எனவே இந்த பிரச்சனை வராமல் இருக்க சிறு வயதில் இருந்தே பெண்கள் முகம் உள்பட உடல் முழுவதும் மஞ்சள் பூசி வந்தால் இந்த பிரச்சனையே வராது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கால இளம்பெண்கள் இதை கடைபிடிப்பார்களா?


இதில் மேலும் படிக்கவும் :