வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 24 ஜூலை 2017 (06:31 IST)

இரவு ஷிப்ட் வேலை செய்பவர்களுக்கு புற்றுநோய்: ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

தற்போதைய ஐடி உலகில் இரவு ஷிப்ட் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சர்வ சாதாரணமாகி விடுகிறது. கைநிறைய சம்பளம் என்பதால் பலர் தூக்கத்தை இழந்து இரவு ஷிப்டில் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து உளவியல் மருத்துவர் ஒருவர் ஆராய்ச்சி செய்து இரவு 11 மணிக்கு மேல் விழித்திருப்பவர்களுக்கு புற்று நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று கண்டுபிடித்துள்ளார்.



 
 
அதாவது இரவு 11 மணிக்குள் நல்ல இருள் உள்ள இடத்தில் தூங்கினால் மட்டுமே மேலோட்டலின் என்ற ஹார்மோன் நமது உடலில் சுரக்குமாம். இந்த ஹார்மோன் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. இந்த ஹார்மோனை எந்த மாத்திரை மருந்துகளாலும் தர முடியாது என்பதும் இதை இரவு தூக்கத்தில் மட்டுமே பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இரவு ஷிப்டில் வேலை செய்துவிட்டு, பகலில் தூங்குபவர்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பது பெரும்பாலும் சாத்தியமில்லை என்பதால் இவர்களுக்கு படிப்படியாக சிறுசிறு நோய்கள் வந்து 40 வயதுக்கு மேல் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.