Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆர்கானிக் முறையில் தலைமுடியை சிவப்பாக மாற்ற வேண்டுமா?

Sivalingam| Last Modified புதன், 15 பிப்ரவரி 2017 (21:52 IST)
தலைமுடியை தற்போது கலர் கலராக மாற்றுவது ஒரு பேஷனாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் கலரிங் செய்யும்போது கெமிக்கல்களை பயன்படுத்தினால் அதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டுவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே கலரிங் செய்யப்போய் முடியே இல்லாத நிலை ஏற்படக்கூடாது.இதை தவிர்க்க ஆர்கானிக முறையில் தலைமுடியை கலரிங் செய்யும் முறையை முன்னணி அழகு நிலையங்கள் அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனால் இவர்கள் இதற்கு போடும் பில் நம் பர்ஸை கடித்துவிடும். எனவே வீட்டிலேயே ஆர்கானிக் முறையில் கலரிங் செய்வது எப்படி என்பதை தற்போது பார்ப்போம்

ஆர்கானிக் முறையில் தலைமுடியை சிவப்பாக மாற்றும் முறை:

தேவையானவை:
சுத்தமான தேங்காய் எண்ணெய் - 1 கப்
பீட்ரூட் - 1/2
கேரட்  - 1
தண்ணீர் - 1/2 கப்.

செய்முறை:
மேலே குறிப்பிட்டிருக்கும் அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் நன்றாக க்ரீம்போல அரைக்க வேண்டும். பின்னர் இதை ஹேர் டை பிரஷ்ஷால் தலை முடியின் வேர்ப் பகுதியில் இருந்து நுனிவரை ஒரே சீராக அப்ளை செய்யவும். 20 நிமிடங்களுக்கு தலை முடியில் சூரிய வெளிச்சம்படும்படி அமர்ந்துகொள்ளுங்கள். அதன் பிறகு, ஆர்கானிக் ஷாம்பூவால் தலையை அலசினால் உங்கள் தலைமுடி மிருதுவாக இருப்பது மட்டுமின்றி சிவப்பாகவும் இருக்கும். இதனால் உங்கள் அழகு கூடும்.


இதில் மேலும் படிக்கவும் :