வங்கியில் பழைய நோட்டுகளை மாற்றுபவர்களின் நிலைமை: சாலமன் பாப்பையா கிண்டல் [வீடியோ]


லெனின் அகத்தியநாடன்| Last Modified செவ்வாய், 15 நவம்பர் 2016 (16:52 IST)
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ஆம் தேதி இரவு 8 மணிக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

இதனால், பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசிய செலவுகளுக்கே கையில் பணம் இல்லாமல் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 100 ரூபாய் மட்டுமே செல்லும் என்பதால், 100 ரூபாய் நோட்டுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு மாற்றச் சென்றால் அங்கும் 2000 ரூபாய் நோட்டுக்களே அதிகமாக வழங்கப்பட்டு வருகிறது.  கையில் உள்ள 500, 1000 ரூபாய்க்களை மக்கள் 100 ரூபாயாக மாற்றுவதால் தற்போது 100 ரூபாய் நோட்டு தான் அதிகபட்ச பணமாக உள்ளது.

இந்நிலையில் இது குறித்து பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா தனது முகநூல் பக்கத்தில் கிண்டலாக வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதனை நீங்களும் பாருங்கள்!

வீடியோ கீழே:

 


இதில் மேலும் படிக்கவும் :