பயமின்றி கட்டுவிரியன் பாம்பை கையால் பிடித்து விளையாடும் குழந்தை - வைரல் வீடியோ!


Sasikala| Last Updated: செவ்வாய், 28 மார்ச் 2017 (16:57 IST)
சுமார் 3 வயதுடைய குழந்தை ஒன்று வீட்டை விட்டு வெளியே வந்து வாசலில் இருக்கும் கடுமையான விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு எடுத்து விளையாடுகிறது. அதனை பார்க்கும் போது பதட்டமாகவும், எங்கே கடித்துவிடப்போகிறது என்ற  பயமும் நம்மை தொற்றி கொள்கிறது.

 
குழந்தை அதனை விளையாட்டு பொருள் என நினைத்து,பாம்பை இழுத்து சென்று விளையாடுகிறது. இதனை கண்டு அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அலறியடித்து ஒட்டம் பிடிக்கின்றனர்.
 
ஆனால் அந்த குழந்தை எவ்வித அச்சமும் இல்லாமல் அதனை அங்கும், இங்கும் இழுத்து சென்றும் கழுத்தில் போட்டு  விளையாடுகிறது. பாம்பு ஒன்றும் செய்யாமல் அப்படியே  நிற்கிறது. அவை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி  வருகிறது.
 
இளங்கன்று பயம் அறியாது என்பார்கள். அது சரியாகத்தான் இருக்கிறது.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :