Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உங்கள் ஜியோ சிம் போஸ்ட்பெய்டா? ப்ரீபெய்டா? புதிய குழப்பம்


Abimukatheesh| Last Updated: புதன், 12 ஏப்ரல் 2017 (18:18 IST)
ஜியோ சிம் அறிமுகம் செய்தபோது போஸ்ட்பெய்ட், ப்ரீபெய்ட் என்ற பிரிவு எதுவும் குறிப்பிடவில்லை. இந்நிலையில் சிலரது ஜியோ சிம் போஸ்ட்பெய்டாக மாறியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

 

 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜியோ சிம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜியோ சிம் அறிமுகம் செய்தபோது போஸ்ட்பெய்ட், ப்ரீபெய்ட் என எதுவும் குறிப்பிடவில்லை. பணம் செலுத்தி உபயோகிக்கும் திட்டம் என்பதால் இது ப்ரீபெய்டாகவே கருதப்பட்டது.
 
இந்நிலையில் சிலரது சிம் போஸ்ட்பெய்ட் என காட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. My Jio என்ற செயலியில் சென்று அவர்களது மொபைல் எண்ணை க்ளிக் செய்தால் அது என்ன மாதிரியாக எண் என்பது தெரியும். அதில் சிலரது எண் மட்டும் போஸ்ட்பெய்ட் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இது எப்படி சாத்தியம் என்பது தெரியவில்லை. பெரும்பாலும் அனைத்து ஜியோ எண்களும் ப்ரீபெய்ட் கணக்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஜியோவில் போஸ்ட்பெய்ட் திட்டம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :