சியோமி பிளாக்பஸ்டர் சேல்: ரூ.4-க்கு ஸ்மார்ட்போன்!

Last Updated: செவ்வாய், 10 ஜூலை 2018 (11:43 IST)
பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி தனது 4 ஆம் ஆண்டு விழாவை இன்று (ஜூலை 10) ஃபிளாஷ் விற்பனை மூலம் கொண்டாடுகிறது. இன்று துவங்கி 12 ஆம் தேதி வரை இந்த சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. 
 
4 ஆம் ஆண்டு விழா என்ற காரணத்தினால், ஸ்மார்ட்போன் மற்றும் டிவி மீது 4 ரூபாய்க்கு ஃபிளாஷ் சேல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டேட் பேங்க், மொபிக்விக் உடன் இணைந்து உடனடி தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் ஆஃபரும் வழங்கவுள்ளது.
 
ஃபிளாஷ் விற்பனை: 
# இன்று முதல் மாலை 4.00 மணிக்கு ரூ.4 ஃபிளாஷ் விற்பனை நடைபெற இருக்கிறது. 
# ரெட்மி வை1, எம்ஐ எல்இடி ஸ்மார்ட் டிவி 4 55 இன்ச், எம்ஐ பாடி கம்போசிஷன் ஸ்கேல், ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி வை2 மற்றும் எம்ஐ பேன்ட் 2 உள்ளிட்டவற்றை ரூ.4 விலையில் வாங்க முடியும். 
 
சிறப்பு தள்ளுபடி:
# சியோமியின் எம்ஐ மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் ரூ.27,999 (ரூ.29,999), 
# எம்ஐ மேக்ஸ் 2 ரூ.14,999 (ரூ.15,999), 
# பேக்பேக் விலை ரூ.1,899 (ரூ.1,999), 
# எம்ஐ இயர்போன்கள் ரூ.649 (ரூ.699), 
# எம்ஐ பேன்ட் 2 ரூ.1,599 (ரூ.1,799) என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சியோமி டிராவல் காம்போ: 
# எம்ஐ டிராவல் பேக்பேக் மற்றும் எம்ஐi ஸ்டிக் ட்ரைபாட் ரூ.2,948க்கும்,
# எம்ஐ பேன்ட் ஹெச்ஆர்எக்ஸ் எடிஷன் மற்றும் எம்ஐ பேன்ட் ஸ்டிராப் புளு ரூ.1,398க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 
சியோமி கம்போ ஆஃபர்:
# இன்று முதல் 12 ஆம் தேதி வரை மாலை 6.00 மணிக்கு ரெட்மி நோட் 5 மற்றும் வி.ஆர். பிளே 2 காம்போ ரூ.9,999க்கும்,
# ரெட்மி வை1 மற்றும் எம்ஐ ப்ளூடூத் ஹெட்செட் காம்போ ரூ.8,999-க்கும்,
# எம்ஐ இயர்போன் பேசிக் காம்போ ரூ.1,499க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 
சியோமி பிளாக்பஸ்டர் விற்பனை:
# ரெட்மி நோட் 5 ப்ரோ ஜுலை இன்று மதியம் 12.00 மணிக்கு விற்பனைக்கு வரயிருக்கிறது. 
# எம்ஐ எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ (32 இன்ச், 43 இன்ச் மற்றும் 55 இன்ச்) மாடல்களும் இன்று மதியம் 12.00 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. 
# ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் எம்ஐ ஜூலை 11 ஆம் தேதி மதியம் 2.00 மணிக்கும்,
# ரெட்மி 5 ஸ்மார்ட்போன் ஜூலை 12 ஆம் தேதி மதியம் 2.00 மணிக்கு விற்பனை நடைபெறுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :