ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 22 நவம்பர் 2017 (12:18 IST)

1 ஜிபி டேட்டா ரூ.20: ஜியோவிற்கே விபூதி அடிக்கும் WIFI DABBA!!

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்திற்கும் தற்போது சிம்மசொப்பனமாக இருப்பது ரிலையன்ஸ் ஜியோ. ஆனால், தர்போது ஜியோவிற்கு போட்டியாக WIFI DABBA வந்துவிட்டது.

 
ஆம், பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான WIFI DABBA ஜியோவைவிட மலிவான விலையில் டேட்டா வழங்குகிறது. இதனால் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் டெட்டா கட்டணத்தில் மீண்டும் புரட்சி ஏற்படவுள்ளதாக தெரிகிறது. 
 
WIFI DABBA டேட்டா கட்டணம் ரூ.2 முதல் துவங்குகிறது. ரூ.2 செலுத்தினால் 100 எம்பி டேட்டா வழங்கபப்டும். ரூ.10-க்கு 500 எம்பி டேட்டாவும், ரூ.20-க்கு 1 ஜிபி டேட்டாவும்  வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் 24 மணி நேர வேலிடிட்டி கொண்டுள்ளது. 
 
தற்சமயம் WIFI DABBA சேவைகள் பெங்களூருவில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த சேவை விரைவில் மற்ற நகரங்களிலும் கொண்டுவரப்படும் என தெரிகிறது.
 
ஃபைபர் ஆப்டிக்ஸ் மூலம் இணைய வசதியை வழங்குகிறது WIFI DABBA. இது புதிய நெட்வொர்க் என்பதால் வேகம் மற்ற நெட்வொர்க்களை விட அதிவேகமாக இருக்கிறது. மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் இத்தகைய வேகத்தை வழங்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
தற்போது பெங்களூர் நகரில் உள்ள டீ கடைகள், பேக்கரி மற்றும் சிறு கடைகளில் இந்நிறுவனம் தனது சேவையை வழங்கிவருகிறது. பிரீபெயிட் டோக்கன் வடிவில் WIFI DABBA ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். 
 
WIFI DABBA டேட்டாவை பயன்படுத்த, மொபைல் நம்பர் மூலம் லாக்இன் செய்தால், குறிப்பிட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பப்படும். ஓடிபி-யை உறுதி செய்து இண்டர்நெட்டை பயன்படுத்தலாம். 
 
பெங்களூருவில் சுமார் 350 ரவுட்டர்கள் பொருத்தப்பட்டு, அவை நொடிக்கு 50 Mbps என்ற வேகத்தில் சுமார் 100 முதல் 200 மீட்டர் இடைவெளியில் இணைய இணைப்புகளை வழங்குகிறது.