வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 9 செப்டம்பர் 2020 (12:06 IST)

விடாத சனி... பெயர் மாற்றியும் Vi-க்கு வந்த சோதனை!

இந்தியாவின் முக்கிய நெட்வொர்க் நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா தனது நிறுவனத்தின் பெயரையும், லோகோவையும் மாற்றி வாடிக்கையாளர்களின் அதிருப்தியை பெற்றுள்ளது. 
 
இந்திய நெட்வொர்க் நிறுவனங்களில் முக்கியமான நிறுவனங்களாக இயங்கி வந்த வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒன்றாக இணைந்தன. அதன்பிறகு வோடபோன் ஐடியா லிமிட்டட் என்ற பெயரிலேயே இயங்கி வந்த நிலையில் தொழில் போட்டியின் காரணமாக பலத்த பின்னடைவை சந்தித்தன. 
 
இந்நிலையில் வோடபோன் ஐடியா என்ற பெயரை சுருக்கி VI என்ற புதிய பெயருடன், புதிய லோகோவுடன் வந்துள்ளது. ஆனால் இதில் சில சிக்கல்கள் இருப்பதாக வாடிக்கையாளர்கள் புலம்பி வருகின்றனர். 
 
ஆப் ஸ்டோரில் (App Store) இரண்டு எழுத்து பயன்பாட்டைக் கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது எனவும், பெயரை மாற்றினால் மட்டும் நெட்வொர்க் கிடைத்துவிடுமா? இப்போதும் அதே நிலைதான் எனவும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 
 
ஆனால், பலரோ இந்த பெயர் மாற்றத்திற்கான காரணத்தையும், இதனை எப்படி உச்சரிக்க வேண்டும் எனவும் தெரிந்துக்கொள்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.