Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வோடபோன் - சாம்சங் கூட்டணி: அதிரடி கேஷ்பேக் சலுகைகள்!!

Last Updated: வெள்ளி, 5 ஜனவரி 2018 (13:19 IST)
வோடபோன் நிறுவனம் இதற்கு முன்னர் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் நிறுவனத்துடன் இணைந்து சலுகைகளை வழங்கியது. தற்போது சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு கேஷ்பேக் சலுகை வழங்கியுள்ளது. அதன் விவரஙள் பின்வருமாறு....

வோடபோன் சேவையை பயன்படுத்தும் புதிய மற்றும் பழைய வாடிக்கயாளர்கள் குறிப்பிட்ட சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது கேஷ்பேக் வழங்கப்படும் என வோடபோன் அறிவித்துள்ளது. இது அனைத்து பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.


பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக் ஆஃபர் பெற:

பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து 24 மாதங்களுக்கு ரூ.198 செலுத்தி வோடபோன் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த ரீசார்ஜ் செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படும்.

போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக் ஆஃபர் பெற வோடபோன் ரெட் திட்டங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது முதல் 12 மாதங்கள் நிறைவுற்றதும், வோடபோன் சார்பில் ரூ.600 கேஷ்பேக் வழங்கப்படும்.


அடுத்த 12 மாதங்களுக்கு பிறகு ரூ.900 கேஷ்பேக் வழங்கப்படும். இதன் மூலம் மொத்தம் ரூ.1500 கேஷ்பேக் பெற முடியும். கேஷ்பேக் பணம் வோடபோன் எம்-பேசா வாலெட்டில் சேர்க்கப்படும். வாடிக்கையாளர்கள் கட்டாயம் மொபைல் வாலெட் பயன்படுத்துவதோடு, முதல் 24 மாதங்களுக்கு வோடபோன் சேவையை பயன்படுத்த வேண்டும்.


இந்த கேஷ்பேக் சலுகை சாம்சங் கேலக்ஸி ஜெ2 ப்ரோ, கேலக்ஸி ஜெ7 நெக்ஸ்ட்,
கேலக்ஸி ஜெ7 மேக்ஸ் ஆகிய சாம்சங் 4ஜி ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :