ஒரே மாதத்தில் இத்தனை கோடியா? டிராய் அதிர்ச்சி!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 11 ஜனவரி 2017 (10:30 IST)
நாட்டின் ஒட்டுமொத்தத் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 110 கோடியை கடந்து, சாதனை படைத்துள்ளது என டிராய் அறிவித்துள்ளது.

 
 
இந்திய அளவில் தொலைத்தொடர்பு சேவை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் விவரங்களை குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
அதில், கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 2 கோடியே 90 லட்சம் பேர் தொலைத்தொடர்பு சேவையில் இணைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
 
இதன்மூலம், சென்ற செப்டம்பர் மாதத்தில் 107 கோடியாக இருந்த ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை, தற்போது 110 கோடியே 29 லட்சமாக அதிகரித்துள்ளது.
 
இதற்கு முக்கிய காரணம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச சேவை அறிவிப்பு எனவும் கூறப்பட்டுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :